Monday, April 20, 2009

படபடப்பு.......!!

என் இமைகள் இமைக்க மறுக்கும்
எதிரில் நீ இருந்தால்,
இதயமும் துடிக்க மறக்கும்
என் அருகில் நீ இருந்தால்......
ஏனோ என்னுள் படபடப்பு
உன் குரல் எங்கோ கேட்டு விட்டால்.....!!!

Wednesday, March 18, 2009

தமிழ் வளர்ச்சி .....!!

எங்கும் தமிழ் ,எதிலும் தமிழ் ....
பெருமை கொள்ளலாமா?
கன்னட திரைஅரங்கு வாசலில்
தமிழ் பிச்சைக்காரன்.............!!! :( :(

Friday, March 13, 2009

அன்னை.......!!!!


விளக்கம் ஏதும் தேவை இல்லை இந்த புகைபடத்திற்கு.......!!!!

Wednesday, February 25, 2009

வாழ்கை......!!!

கருவறை தோன்றி கல்லறை செல்லும் பாதையே வாழ்கை,
வாழ்ந்து விடலாம் என்று களியும் கொல்லாதே,
வாழ முடியாது என்று நொந்தும் விடாதே,
நிருத்தம் இல்லாத பேருந்து போல தான் வாழ்கை,
முடிந்தால் உன் பாதையில் ஒட்டிசெல் ,
இல்லை அது செல்லு பாதையை ரசிக்க கற்றுக்கொள்....
வாழ்கை,
இதற்கு முதலும் புரியாது,
முடிவும் தெரியாது.............!!!!

Friday, February 13, 2009

சிற்பி..........!!!

சிற்பியின் திறமைக்கு
சரியான பரிசு கிடைக்கவில்லை,
ஆனால் கிடைத்து விட்டது
இந்த மதத்திற்கு
இன்றும் ஒரு புதிய கடவுள்.........!!!!