Thursday, August 26, 2010

தனிமை தீ......!!!

என்னுள் தீயாய் எரிகிறது
உன் நினைவுகள்,
அனைக்க நீர் தேவை இல்லை,
நீ இருந்தால் போதும்...................!!!

Tuesday, June 29, 2010

களவு.........!!

தூக்கம் தொலைத்த என் இரவுகள்
இன்று ஒப்புக்கொண்டது ,
அவளிடம் களவு போனது
தூக்கம் மாட்டும் அல்ல,
என் இதயமும் என்று..........................! :)

Monday, June 28, 2010

முடிவற்ற முதல்...!!

முதல் பார்வை,
முதல் வார்த்தை,
முதல் வாழ்த்து,
முதல் ஊடல்,
முதல் கோபம்,
முதல் கண்ணீர்,
முதல் ஏக்கம்,
முதல் மன்னிப்பு,
முதல் கனவு,
முதல் நகைப்பு,
முதல் சிற்றுண்டி,
முதல் பேருந்து பயணம்,
முதல் தொலைபேசி அழைப்பு,
முதல் திரைப்படம்,
முதல் பரிசு,
முதல் பிரிவு,
அனைத்தும் பசுமையாய் என்னுள்!
இன்றும், என்றும்..............!!

Thursday, June 24, 2010

பித்தன்........!!

தனியாக பேசினால் பித்தனாம் .!
நானும் இன்று பித்தன் தான்,
என்றோ உன்னோடு
தனிமையில் பேசியதால் .............!!

Monday, June 21, 2010

காதல் ரகசியம்..!!!

காதோடு சொன்ன ரகசியமும்
காற்றோடு போகாதோ??
அவள் நெற்றிச்சுருள் முடி
என் காதோடு உரசும் போது ..................!!!

Thursday, April 22, 2010

முட்களின் ஏக்கம் !!

கடிகார முட்களும் ஏக்கத்தோடு சுற்றுகின்றன ,
மறுமுறை அவள் மணி பார்க்கும் போது ,
அவள் முகம் பார்க்க வேண்டும் என்று .......!!!