Saturday, December 20, 2008

கார்த்திகை திருவிழா .......!!!

கார்த்திகை மாதம் பிறந்து விட்டால், மாலை போட்டு மலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கிறது. மாலை போட்டு விரதம் துவங்கி விட்டால் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பல.ஆனால் சிலர் அதை பற்றி சிறிதும் எண்ணி பார்ப்பதில்லை..

மாலை போட்டுவிட்டு எங்கோ சுற்றுலாவிற்கு செல்வது போல் பேருந்து ஒன்றை பிடித்து விட்டு கோவில் கோவிலாக செல்ல ஆரம்பித்து விடுகிறார்கள் .போகும் இடங்களிலும் ,ஆரவார கூச்சலிட்டு ,வரிசையில் நின்று தரிசனம் செய்யாமல் கம்பிகளில் ஏறி குதித்து செல்கின்றனர்.இதற்கும் மேலாக கோவில்களின் உள்ளேயே எச்சில் துப்புவது ,தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது போன்றவற்றையும் சாதரணமாக செய்கின்றனர். சிலருக்கு விரதத்தை விட மது அருந்துவதும், புகை பிடிபதும், பெண்களை தவறாக பார்பதும் தான் பெரிதாக தெரிகிறது. விரத நாட்களில் இந்த அளவிற்கு கூட கட்டுப்பாடு இல்லாதவர்கள் ஏன் மாலை போட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். விரதம் என்பது நாம் இறைவனுக்காக இருப்பதில்லை. நாம் நமக்காக இருப்பது. இறை தரிசனத்துக்கு முன்பு நம்மை நாமே தூய்மை படுத்தி கொள்வதற்கு தான் இந்த விரதமும் மாற்ற சம்பிரதாயங்களும்.

இவ்வாறு சிலர் தவறாக நடந்து கொள்வது ,இவர்களுக்கு எப்படி இருகிறதோ தெரியவில்லை, ஆனால் உண்மையான பக்தியோடு ,இறைவனை மட்டுமே எண்ணி கோவிலுக்கு வருபவர்களுக்கு இது ஒரு பிரச்சனை தான்.இதற்கு தனியாக தீர்வு காண முடியாது . ஆனால் தனி மனித ஒழுக்கம் ,தனி மனித கட்டுப்பாடு போன்றவற்றை மக்கள் ஏற்று கொண்டு கடை பிடித்தாலே போதும். இவற்றை கோவிலுக்குள் மட்டுமல்லால் ,வெளியேயும் கடைபிடிக்க ஆரம்பித்தால் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க தேவை இருக்காது. இறைவனை எங்கேயும் காணலாம்....!!!! :)

வானவில்......!!

வானவில்லோடு ஒப்பிடாதே நம் காதலை ,
வண்ணமயமாக இருந்தாலும் ,
ஏனோ தோன்றி மறைவதிர்கில்லை
நம் காதல்.........!!!!

Monday, December 8, 2008

வறுமை ......!!!

தான் கேட்டதைவிட சிறியதாய்
வாங்கி கொடுத்து விட்டார்களாம் சரவெடியை ,
வருத்தத்தோடு வெடித்து சென்றது
மாடி வீடு குழந்தை ,
அங்கு வெடிக்காமல் சிதறிய சில வெடிகளை
ஆனந்தமாய் பொறுக்கி கொண்டிருக்கிறது
பக்கத்துக்கு குடிசை குழந்தை,
இந்த தீபாவளிக்கு
வெடியாவது கிடைத்தே என்று............!!!!

Thursday, December 4, 2008

ஏமாற்றம் .!!!

உன் இதயம் பேசும் வார்த்தைகளை கேட்க
நிதமும் நான் வருகிறேன்,ஆனால்
உன் இதழ்கள் தரும் காயங்களோடு
கண்கள் கலங்கி செல்கின்றேன் ,
உன் மனம் அதன் மணம்,
வண்டை ஈர்ப்பதில்லை,
என்னை அல்லவா ஈர்க்கிறது.
தேன் இல்லாத மலரிடம் ஏமார்ந்து போகும் வண்டா நான்??
உன்னிடம் தினமும் ஏமார்ந்து செல்கின்றேன்......!!!

Tuesday, December 2, 2008

வணிகம் ஆகி போன பக்தி....!!!

இன்றைய நாகரீகத்துக்கு ஈடாக வளர்ந்து வரும் விஷயங்களில் 'பக்தி'யும் ஒன்று.இதை பக்தியின் வளர்ச்சி என்று சொல்வதை விட அதை சார்ந்த நம்பிக்கைகளின் வளர்ச்சி என்றே கூறலாம்.


தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான கோவில்கள் ,சுற்றுலா ஸ்தலங்களாக மாறி வருகின்றன .பக்திக்காக கோவிலுக்கு செல்பவர்களை காட்டிலும் ,பொழுது போக்கிற்காக செல்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாகி கொண்டிருகின்றது.திருச்சியில் உள்ள மலைகோட்டை இதற்கு ஒரு நல்ல எடுத்துகாட்டு.


இது ஒரு புறம் இருக்க ,கோவில்களை வருமானம் தரும் இயந்திரமாக எண்ணி பிழைபோரின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது . இதில் கொடுமை என்னவென்றால்,பல நேரங்களில் கோவிலில் உள்ள அர்ச்சகரே,நாற்காலி தேய்த்து கொண்டிருக்கும் ஒரு சாதரண அரசு ஊழியனை போல் நடந்து கொள்வது தான்.கடவுளை எண்ணி மந்திரம் சொல்லவேண்டிய சில அர்ச்சகர்கள்,தங்கள் தட்டில் விழும் தட்சணையை எண்ணி மந்திரம் சொல்கிறார்கள்.'பத்து'ருபாய் குடுபவனை ஒரு விதமாகவும்,'ஒரு'ருபாய் குடுபவனை ஒரு விதமாகவும் ,பணம் குடுகாதவனை வேறு விதமாகவும் பாவிக்கும் குணத்தை இன்று பல அர்ச்சகர்களிடம் காண முடியும். இதற்காக அவர்களை குறை கூறவில்லை.ஆனால் நிம்மதி தேடி செல்லும் கோவில்கள் கூட வணிகம் ஆகி போன அவலம் வேதனை. !!


சில கோவில்களில் இதை விட மோசமான விஷயங்களும் நடக்கிறது.ஒரு முறை நானே ஏமார்ந்து போனேன்.திருச்செந்தூர் முருகன் கோவில் தெய்வத்தை தரிசித்து விட்டு கோடி மரத்தை சுற்றி கொண்டிருந்தேன் .அப்போது அங்கு பிரசாதங்களோடு அந்தணர்(பார்க்க கோவிலில் வேலை செய்பவரை போல் இருந்தார்) ஒருவர் என்னருகே வந்தார்.என்னை அழைத்து சிறிது பிரசாதமும் கொடுத்தார்.சரி ,கோவில் பிரசாதம் தானே என்று நானும் வாங்கி கொண்டேன்.நான் வாங்கிய மறு கணமே,அவர் கொடுத்த பிரசாததிருக்கு என்னிடம் தட்சனை கேட்டார். அதிர்ந்து போன நான் வேறு வழி இன்றி அவர் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு வந்தேன்.சற்று நகர்ந்து வந்து பார்த்தால் அவரை போலவே பல அந்தணர்கள் கையில் பிரசாதங்களோடு வருவோர் போவோரையெல்லாம் அழைத்து கொண்டிருந்தனர்.



கோவில் நிர்வாகம் நினைத்தால் இத்தகைய அவலங்களை தடுக்கலாம்.ஆனால் கடவுளை தரிசிக்கவே 'வி.ஐ.பி தரிசனம்' 'உடனடி தரிசனம் ' 'சிறப்பு கட்டண தரிசனம்' என்று தரம் பிறிது பணம் வசூலிக்கும் இவர்கள்,இதைஎல்லமா தடுக்க போகிறார்கள்???



சமத்துவம் சமத்துவம் என்று நாம் வாய் கிழிய பேசினாலும்,
இந்த சமத்துவ கொள்கை கோவில்களில் கூட எடுபடுவதில்லை.....!!!!