கார்த்திகை மாதம் பிறந்து விட்டால், மாலை போட்டு மலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கிறது. மாலை போட்டு விரதம் துவங்கி விட்டால் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பல.ஆனால் சிலர் அதை பற்றி சிறிதும் எண்ணி பார்ப்பதில்லை..
மாலை போட்டுவிட்டு எங்கோ சுற்றுலாவிற்கு செல்வது போல் பேருந்து ஒன்றை பிடித்து விட்டு கோவில் கோவிலாக செல்ல ஆரம்பித்து விடுகிறார்கள் .போகும் இடங்களிலும் ,ஆரவார கூச்சலிட்டு ,வரிசையில் நின்று தரிசனம் செய்யாமல் கம்பிகளில் ஏறி குதித்து செல்கின்றனர்.இதற்கும் மேலாக கோவில்களின் உள்ளேயே எச்சில் துப்புவது ,தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது போன்றவற்றையும் சாதரணமாக செய்கின்றனர். சிலருக்கு விரதத்தை விட மது அருந்துவதும், புகை பிடிபதும், பெண்களை தவறாக பார்பதும் தான் பெரிதாக தெரிகிறது. விரத நாட்களில் இந்த அளவிற்கு கூட கட்டுப்பாடு இல்லாதவர்கள் ஏன் மாலை போட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். விரதம் என்பது நாம் இறைவனுக்காக இருப்பதில்லை. நாம் நமக்காக இருப்பது. இறை தரிசனத்துக்கு முன்பு நம்மை நாமே தூய்மை படுத்தி கொள்வதற்கு தான் இந்த விரதமும் மாற்ற சம்பிரதாயங்களும்.
இவ்வாறு சிலர் தவறாக நடந்து கொள்வது ,இவர்களுக்கு எப்படி இருகிறதோ தெரியவில்லை, ஆனால் உண்மையான பக்தியோடு ,இறைவனை மட்டுமே எண்ணி கோவிலுக்கு வருபவர்களுக்கு இது ஒரு பிரச்சனை தான்.இதற்கு தனியாக தீர்வு காண முடியாது . ஆனால் தனி மனித ஒழுக்கம் ,தனி மனித கட்டுப்பாடு போன்றவற்றை மக்கள் ஏற்று கொண்டு கடை பிடித்தாலே போதும். இவற்றை கோவிலுக்குள் மட்டுமல்லால் ,வெளியேயும் கடைபிடிக்க ஆரம்பித்தால் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க தேவை இருக்காது. இறைவனை எங்கேயும் காணலாம்....!!!! :)
No comments:
Post a Comment