Saturday, November 15, 2008

காதலை தொலைத்தவனின் ஏக்கம் !!!

பேசி இருக்கலாம்
நான் பேச தயங்கிய வார்த்தைகளை .......!
பார்க்காமல் இருந்திருக்கலாம்
அவளது ஓர விழி பார்வைகளை ......!
கேட்காமல் இருந்திருக்கலாம்
அவளது செல்ல சிணுங்கல்களை .......!
தவிர்த்து இருந்திருக்கலாம்
அவளை பற்றிய சிந்தனைகளை ......!
அறிய வைத்துஇருக்கலாம்
அவள் மேல் நான் வைத்திருந்த நேசங்களை ....!
சொல்லி இருக்கலாம்
நான் சொல்ல பயந்த காதலை ..........!.
சொல்லி இருந்தால் ,வாழ்ந்து இருக்கலாம் ஒருவேளை ,
நான் தொலைத்து நிற்கும் வாழ்க்கையை .........!!

3 comments:

Unknown said...

sema kavidhai maapi....
wipro kavingargalaiyum valarkiradho!!!!1

Kram said...

nice one da :) after long time got to read ur poems :) missing it a lot

Unknown said...

anna ur kavidai is really reall awesome.. yaaru antha ponnu.. unga kaathala solli iruntha nichayam maruthu irruka maatanga..any help...? i wil surely help u...